உயரப் போகும் இன்சூரன்ஸ் ப்ரீமியம்! அதிர வைக்கும் காரணங்கள்!

உயரப் போகும் இன்சூரன்ஸ் ப்ரீமியம்! அதிர வைக்கும் காரணங்கள்!

தமிழகத்தில் பால் விலை அதிகரிக்கும் போதெல்லாம் பால் தொடர்பான பொருட்களின் விலையையும் உடனடியாக வியாபாரிகள் உயர்த்தி விடுவார்கள். அப்படி தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உயர்த்த இருக்கின்றன. இன்சூரன்ஸ் ப்ரீமியங்களை உயர்த்துவதற்காக இந்த நிறுவனங்கள் சொல்லியிருக்கும் காரணம் தான் அட போங்கப்பா! ரகமாக இருக்கிறது.

health insurance

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு பற்றி நாமெல்லாம் செய்திகளில் படித்திருப்போம். இதைத் தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் காரணமாக தெரிவித்திருக்கின்றன. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது பெருமளவில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நுரையீரல் பிரச்சனைக்கு அதிகளவில் ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில், நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா போன்ற காரணங்களுக்காக மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவதும் அதிகரித்து இருப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் கவலைப்படுகின்றன.

money

இதே ரீதியில் சென்றுக் கொண்டிருந்தால், நுரையீரல் சார்ந்த அறுவை சிகிச்சைகள் செய்யக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை விரைவில் அதிவேகமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீடு இருந்தால், அவர்கள் அதைப் பயன்படுத்தி இப்படி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள் என்றும், இப்படி வரும் நோயாளிகளுக்கு அதிக பணத்தை வழங்கினால் அது லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ப்ரீமியம் தொகையை உயர்த்த காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.