உபர் ஈட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது சொமேட்டோ – பின்னணி என்ன?

 

உபர் ஈட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது சொமேட்டோ – பின்னணி என்ன?

உணவு விநியோக நிறுவனமான உபர் ஈட்ஸை மற்றொரு உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ வாங்கியுள்ளது.

மும்பை: உணவு விநியோக நிறுவனமான உபர் ஈட்ஸை மற்றொரு உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ வாங்கியுள்ளது.

சென்னை, பெங்களூரு, புனே போன்ற பெருநகரங்களில் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் ஆகியவை கோலோச்சி வருகின்றன. ஏனெனில் இந்த இடங்களில் பணிபுரியும் இளைஞர்கள் பெரும்பாலானோர் மதிய உணவு நேரத்தின்போது வெளியில் சென்று சாப்பிடுவதில்லை. இருந்த இடத்தில் இருந்தே ஸ்மார்ட்போனில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் பண்ணி விடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்களுமே இவ்வாறு ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுதான் உணவு விநியோக துறையின் அபார வளர்ச்சிக்கு காரணம்.

uber

கால்டாக்சி நிறுவனமான உபர் இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு உணவு விநியோக வணிகத்தை தொடங்கியது. இந்த நிலையில், இரண்டே ஆண்டுகளில் தங்களது பங்கை அந்நிறுவனம் சொமேட்டோ நிறுவனத்திற்கு விற்றுள்ளது. தற்போது சொமேட்டோ நிறுவனம் இந்தியாவில் உபரின் உணவு விநியோக வர்த்தகத்தை அனைத்து பங்கு ஒப்பந்தத்திலும் வாங்கியுள்ளது.

uber eats

தீபீந்தர் கோயல் தலைமையிலான உணவு விநியோக தளத்தில் உபருக்கு 9.99 சதவீத பங்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்தியாவில் உபர் ஈட்ஸ் செயல்பாடுகள் அனைத்தும் சொமாடோ இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து இயங்கும்.