உன்னை யாரு உள்ளே வரச்சொன்னா? வெளியே போ: மாலில் ஜொமோட்டோ ஊழியருக்கு நடந்த அவலம்; மரியாதையை தீர்மானிக்கிறதா ஆடை?

 

உன்னை யாரு உள்ளே வரச்சொன்னா? வெளியே போ: மாலில் ஜொமோட்டோ ஊழியருக்கு நடந்த அவலம்; மரியாதையை தீர்மானிக்கிறதா ஆடை?

உணவு டெலிவரி செய்யும் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவரை ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி : உணவு டெலிவரி செய்யும் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவரை ஷாப்பிங் மாலில் அனுமதிக்காமல், கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் உணவும்,  ‘டெலிவரி பாய்ஸ்’ 

zomato

வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும் நம் மக்களின்   அன்றாட தேவைகள் கூட நவீனமயமாகி விட்டன. அதிலும், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற முறை வந்த பிறகு, எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் உணவு வரை நமக்குத் தேவையான அனைத்து  பொருட்களுமே நம் வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 

`ஜொமோட்டோ’ ஊழியருக்கு நடந்த கொடுமை 

mall

அதிலும் குறிப்பாக, தேவையான உணவை ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்து விடுகிறார்கள். அப்படி, டெலிவரி செய்வதற்கு ‘டெலிவரி பாய்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான இளைஞர்கள் இரவு மகள் பாராமல் உழைத்து வருகின்றனர். ஆனால்  டெலிவரி ஊழியர் என்ற ஒரே காரணத்துக்காக `ஜொமோட்டோ’ ஊழியர் ஒருவரை மாலில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வாக்குவாதம் 

புதுச்சேரி வணிக வளாகம் ஒன்றினுள் நுழையும் ஜொமோட்டோ ஊழியர் ஒருவரை  வணிக வளாக ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தி நீங்கள் உள்ளே செல்லக்கூடாது’ என்கிறார். அதற்கு அந்த ஊழியரோ, ‘நான் ஏன் செல்லக் கூடாது? உணவு டெலிவரி எடுக்கச் செல்கிறேன். இங்கு வருபவர்களுக்கு நீங்கள் பார்க்கிங் கூட தருவதில்லை’ என்று பதில் கூற, அதற்கு அந்த வணிக வளாக ஊழியரோ,  ‘உங்களைப் போன்றவர்களுக்கு மட்டும்தான் தருவதில்லை’ என்கிறார். அவரின் பதிலை கேட்டு கோபமான  ஜொமோட்டோ ஊழியரோ, ஏன்? அப்படி என்ன நாங்கள் செய்துவிட்டோம்.  உங்களின் டெலிவரி பார்ட்னர்ஸ் நாங்கள்,  எங்களால்தான் உங்களுக்கு வியாபாரம் நடக்கிறது.  எங்களை ஏன்  பிரித்து பார்க்கிறீர்கள்? இந்த டீ ஷர்ட்டை கழற்றினால் நானும் உங்களுக்கு வாடிக்கையாளர்தான்’ என்று தன் ஆதங்கத்தைக் கொட்டி தீர்க்கிறார். 

கட்டாயமாக வெளியே துரத்திய அவலம்

zomato

அந்த டீ ஷர்ட்டை நீங்கள் கழற்றிவிட்டால் உங்களுக்கு இங்கு தனி மரியாதை என்று மீண்டும் அந்த வணிக வளாக ஊழியர் ஆடையை காரணம் கூற, அங்கு வந்த  மற்றொரு நபரோ, உன்னை யார் உள்ளே வர சொன்னது? உன் ஆர்டரே வேண்டாம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைக்கிறார். 
இவர்களின் செயலால் நிலைகுலைந்து போன, ஜொமோட்டோ ஊழியர் நானும் டிகிரி ஹோல்டர்தான் என்று கூற யாரும் அதை கண்டுகொள்ளுவதாகத் தெரியவில்லை. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

மரியாதையை தீர்மானிக்கும் ஆடை?

zomato

உடையைக் காரணம்  காட்டி தனி நபருக்கு அளிக்கக் கூடிய அடிப்படை மரியாதையைக் கூட அளிக்காமல்  தனியார் வளாகத்திலிருந்து ஜொமோட்டோ நிறுவன ஊழியர்  கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பது  சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

இதையும் வாசிக்க: பா.ம.க.வுக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு போடுங்க: மேடையில் உளறி கொட்டிய அமைச்சர்; கடுப்பான ராமதாஸ்