உன்னை சும்மா விட மாட்டேன் – கங்கணம் கட்டும் கங்கனா

 

உன்னை சும்மா விட மாட்டேன் – கங்கணம் கட்டும் கங்கனா

பாலிவுட் நடிகைகளிலேயே கொஞ்சம் விவகாரமானவர் கங்கனா ரனாவத். அமிதாப் பச்சன் தவிர்த்து கிட்டத்தட்ட பாலிவுட்காரர்கள் பாதிபேருக்கு மேல் பாலியல் குற்றசாட்டு கூறி அதகளப்படுத்துபவர். வழக்கமாக தங்களின் கால்ஷீட் பார்ப்பதற்கென தனியாக நம்பிக்கைக்குரிய உதவியாளரை நடிகைகள் வைத்துக்கொள்வது வழக்கம்.

பாலிவுட் நடிகைகளிலேயே கொஞ்சம் விவகாரமானவர் கங்கனா ரனாவத். அமிதாப் பச்சன் தவிர்த்து கிட்டத்தட்ட பாலிவுட்காரர்கள் பாதிபேருக்கு மேல் பாலியல் குற்றசாட்டு கூறி அதகளப்படுத்துபவர். வழக்கமாக தங்களின் கால்ஷீட் பார்ப்பதற்கென தனியாக நம்பிக்கைக்குரிய உதவியாளரை நடிகைகள் வைத்துக்கொள்வது வழக்கம். ஆனா, கங்கனாவை பொறுத்தவரை, உடன் நடிக்கும் நடிகர்கள்மீது ஷிஃப்ட் போட்டு பாலியல் குற்றச்சாட்டு கூறி அவர்களுக்கு நோட்டிஸ் மேல் நோட்டிஸ் அனுப்புவதற்கென தனியாக ஒரு வக்கீலையே வேலைக்கு வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள்.

kangana ranaut

கங்கனாவிடம் சிக்கி சின்னாபின்னாமாகி ஆள விடு ஆத்தா என எஸ்கேப் ஆன ஹிர்திக் ரோஷனிடம் கேட்டால் மனிதர் புலம்பி தள்ளுவார். ஹிர்திக் மட்டுமல்ல, ஆதித்யா பஞ்சோலி, அபூர்வா அஸ்ரானி, கரன் ஜோகர் என கங்கானவிடம் பாலியல் குற்றச்சாட்டு, கதை திருட்டு, என‌ பல்வேறு சண்டைகளோடு மல்லுகட்டு நிற்காத பாலிவுட் பிரபலம் இல்லை. இதில் இந்த ஆதித்யா பஞ்சோலி கதைதான் கொஞ்சம் பாவம். ஏன்னா, மத்தவங்ககூட இப்ப சமீபத்துலதான் பிரச்னை என்றாலும், பஞ்சோலியுடனான பஞ்சாயத்துக்கு வயசு பதிமூணு. ஆமாங்க, 13 வருஷமா அவர் மேல மாத்தி மாத்தி குற்றச்சாட்டு.

kangana and rangoli

 

லேட்டஸ்ட் நியுஸ் என்னன்னா, தன்மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்த இருப்பதாக கங்கனாவின் வக்கீல் மிரட்டுவதாக வீடியோ ஆதாரம் ஒன்றை மும்பை போலீசிடம் சமர்பித்து கண்ணை கசக்கிவிட்டு வந்திருக்கிறார் பஞ்சோலி. அந்த வீடியோவில் வரும் ஒரு கூத்து என்னன்னா, இந்தமுறை பாலியல் குற்றச்சாட்டு கூற இருப்பது கங்கனாவின் சகோதரி ரங்கோலியாம். இனிமேல் கங்கனா நடிக்கும் படங்களில் உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லா காட்சிக்கும் டூப் போட்டுட்டு ஆள விடுங்க சாமி என எஸ்கேப் ஆக போகிறார்கள்.