‘உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்’… காதலியின் பிறந்தநாளன்று காதலை உறுதி செய்த முகின்

 

‘உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்’… காதலியின் பிறந்தநாளன்று காதலை உறுதி செய்த முகின்

நிகழ்ச்சி முடிந்து வந்ததும் அவர் தன் பதிலை சொல்வதாக கூறியிருக்கிறார் என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்

பிக் பாஸ்  3  நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில்  வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசியாவை  சேர்ந்த முகின் மீது பிக் பாஸ் சகப்போட்டியாளரான அபிராமி காதல்வயப்பட்டார் .  ஆனால் முகின் மலேசியாவில் நான்  நதியா என்பவரை காதலிக்கிறேன். நிகழ்ச்சி முடிந்து வந்ததும் அவர் தன் பதிலை சொல்வதாக கூறியிருக்கிறார் என்று கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

mugen

 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முகினிடம்,  நதியாவிடம் கேட்டு விட்டீர்களா அவருடைய பதில் என்ன ?  சம்மதித்து விட்டாரா ? என்று கேள்வி கேட்ட போது, எல்லாம் சரியாகி விட்டது ஓகே சொல்லிட்டாங்க என்று கூறினார் முகின்.

nadiah

இந்நிலையில் முகின்  மலேசியாவில் நேற்று தனது காதலி நதியாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், உன்னுடன் இருப்பதற்கு நான் பாக்கியம் செய்துள்ளேன். உனக்கு பலர் என்னை விட சிறந்த பரிசுகளைத் தருகிறார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் என் காதல் மற்றும் மகிழ்ச்சியினால் நான் இந்த பயணம் முழுவதும் உன்னை புன்னகையுடன் வைத்திருப்பேன் என்று  உறுதியளிக்கிறேன்.

இந்த நாளில், அதிர்ஷ்டம் மற்றும் ஆசீர்வாதங்கள் மட்டுமே உன் மீது  பொழிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிரித்துக் கொண்டே இரு… கடவுள் உன்னை  எப்போதும் ஆசீர்வதிப்பார்’ என்று பதிவிட்டுள்ளார்.  இதைக்கண்ட நெட்டிசன்கள், நீங்கள் சிறந்த ஜோடி வாழ்த்துகள் என்று பதிவிட்டு வருகின்றனர்.