உன்னாவ் வழக்கில் சிக்கியுள்ள குல்தீப் சிங் பாஜகவில் இருந்து நீக்கம்!

 

உன்னாவ் வழக்கில் சிக்கியுள்ள  குல்தீப் சிங் பாஜகவில் இருந்து நீக்கம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உன்னாவ் வழக்கில் சிக்கியுள்ள  குல்தீப் சிங் பாஜகவில் இருந்து நீக்கம்!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி ,தன் பகுதியில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரிடம் வேலை கேட்டுச் சென்றபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பெண் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், அவரது தந்தை மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து அப்பெண் மற்றும் அவரது தாய் குல்தீப் சிங் செங்கார் வீட்டு  முன்பு தீக்குளிக்க முயன்றனர். இதனால் இந்த விவகாரம் வெளியுலகிற்குத் தெரியவந்தது. பின்னர், குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த 28ஆம் தேதி அப்பெண் காரில் சென்ற போது  லாரி ஒன்று இடித்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் இறந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனால் பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

இந்நிலையில் உத்தரப் பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, கடந்த ஆண்டே குல்தீப் சிங்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவருடைய விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாததால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். ஆனால்  சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தில் குல்தீப்பின் மனைவி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதே சமயம் பாஜக நிர்வாகிகள் அவரை சிறையில் சந்தித்தும் வருகின்றனர். இதனால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கூறுவது உண்மையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.