உன்னாவ் பெண் எழுதிய கடிதம் ஏன் தன் முன் இன்னும் வரவில்லை? : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி!

 

உன்னாவ் பெண் எழுதிய கடிதம் ஏன் தன் முன் இன்னும் வரவில்லை? : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி!

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியிலுள்ள பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்

உன்னாவ் பெண் எழுதிய கடிதம் ஏன் தன் முன் இன்னும் வரவில்லை? : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி!

புதுடெல்லி:  உன்னாவ் பகுதி பெண் எழுதிய கடிதம் ஏன் தன் முன் இன்னும் வரவில்லை என உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம் கேட்டுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியிலுள்ள பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். இதனையடுத்து குல்தீப் செங்கார்  எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் தந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். பின்னர் கடந்த 28ஆம் தேதி அப்பெண் காரில் சென்ற போது  லாரி ஒன்று இடித்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அப்பெண்ணின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் இறந்தனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அப்பெண்,  ‘தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக இம்மாதம் 12ஆம் தேதி  கடிதம் எழுதியுள்ளார். என் குடும்பத்தினரை  எம்.எல்.ஏ மிரட்டி வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  இந்தக் கடிதம் ஏன் இன்னும் அவர் முன் வரவில்லை என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க  வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கடிதம் தாமதம் ஆனது ஏன் ? என்பது குறித்த தெளிவான அறிக்கையை ஒருமாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.