உன்னாவ்: பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றவாளி! – டெல்லி நீதிமன்றம் அதிரடி

 

உன்னாவ்: பா.ஜ.க எம்.எல்.ஏ குற்றவாளி! – டெல்லி நீதிமன்றம் அதிரடி

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வேலை கேட்டுவந்த சிறுமியை பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. ஆனால், புகார் அளித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

kuldeep singh

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வேலை கேட்டுவந்த சிறுமியை பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. ஆனால், புகார் அளித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தினர்தான் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட்டது, அந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதோடு, வழக்கை டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். இதற்கிடையே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது.

delhi court

இதன் அடிப்படையில் இந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரித்து வந்தது. நீதிபதி தர்மேஷ் சர்மா இன்று தீர்ப்பளித்துள்ளார். அதில், குல்தீப் சிங் குற்றவாளி என்று கூறிய அவர், தண்டனை தொடர்பான வாதங்கள் வருகிற 18ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய தீர்ப்பில், “அந்த சிறுமியின் வாக்குமூலத்தில் உண்மையிருப்பதை கண்டறிந்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.