‘உனது துணிச்சலை வரவேற்கிறேன்’: சூர்யாவிற்கு வீடியோ வெளியிட்டு ஆதரவு தெரிவித்த சத்யராஜ்

 

‘உனது துணிச்சலை வரவேற்கிறேன்’: சூர்யாவிற்கு வீடியோ வெளியிட்டு ஆதரவு தெரிவித்த சத்யராஜ்

நடிகர் சூர்யாவின் கல்வி கொள்கை குறித்த பேச்சிற்கு நடிகர் சத்யா ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் சூர்யாவின் கல்வி கொள்கை குறித்த பேச்சிற்கு நடிகர் சத்யா ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்விக் கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளை மூடவேண்டும் என்று என்று கஸ்தூரி கஸ்தூரி  ரங்கன் கூறியது தவறு என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து  சூர்யாவின் பேச்சுக்கு  ஆதரவு அளிக்கும் வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சமுத்திரக்கனி என்று இன்னும் ஏராளமானோர் தங்களது ஆதரவை அளித்தனர். 

இந்த நிலையில் சூர்யா இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து மற்றும் அவரின் கல்வி கொள்கை பேச்சிற்கு ஆதரவு அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா. உன்னை ஒரு வயது நான் தூக்கி கொஞ்சியுள்ளேன். உன்னுடைய அனைத்து பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து கூறியுள்ளேன். ஆனால் இந்த முறை தான் சமூகவலைத்தளங்களில் கூறுகிறேன். உன்னை நினைத்து நான் பெருமை படுகிறேன். சமூக நிதிக்காக நீ குரல் கொடுத்திருக்கிறார். மாஸ் ஹீரோவாக இருந்து கொண்டு நீ குரல் கொடுத்தது பெரிய விஷயம். நுனி புல் மேய்வது போல் இல்லாமல் அழகமாக இறங்கி என்ன சொல்ல வேண்டுமோ அதை சரியாக சொல்லியுள்ளீர்கள். உனது துணிச்சலை வரவேற்கிறேன்’ என்று தனது ஆதரவைக் கூறியுள்ளார்.