உனக்கென்னப்பா, ஃபுல் மெஜாரிட்டி, எங்களுக்கு அப்படியா? ஜெகனைப் பார்த்து பொறாமையில் சில முதல்வர்கள்!

 

உனக்கென்னப்பா, ஃபுல் மெஜாரிட்டி, எங்களுக்கு அப்படியா? ஜெகனைப் பார்த்து பொறாமையில் சில முதல்வர்கள்!

அவருடைய மகளை அமெரிக்க கல்லூரியில் சேர்ப்பதற்கு திரும்பவும் குடும்பத்துடன் அமெரிக்கா செல்கிறார். மெஜாரிட்டி இருக்கு, மத்திய அரசு சப்போர்ட் இருக்கு, ஜெகனால நிம்மதியா வெளிநாடு போக முடியுது. நம்மாளுக்கு நிம்மதியா வெளிக்கிக்கூட போகமுடியல, டெலிகேட் பொசிஷ‌ன்!

இரு தலைமை ஆட்சியின்கீழ் தமிழகம் இருப்பதால், இருவருக்குமே நாற்காலி கவலை, பறிபோய்விடுமோ என ஒருவருக்கும், எப்படியாவது பறித்துவிடவேண்டும் என மற்றொருவரும் இடையறாத கவலையில் இருக்கின்றனர். கர்நாடகாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அரும்பாடுபட்டு கவிழ்த்தும், ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்குமா, கிடைத்தாலும் இடைத்தேர்தலில் பெரும்பான்மையை தக்கவைக்க முடியுமா என்ற கவலை எடியூரப்பாவுக்கு. துணைநிலை ஆளுநரான கிரண்பேடியை சமாளிப்பதற்கே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. எந்தப் பிரச்னையும் (இப்போதைக்கு) இல்லாமல் சமாளிக்கும் தென்மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானாவும்தான்.

Leaders in Trouble

மிதமிஞ்சிய மெஜாரிட்டி பெற்று ஆட்சியில் அமர்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு அதிரடி அறிவிப்புமாக இரண்டு மாதங்களை தொட்டுவிட்டார் ஜெகன் மோகன். மத்தியில் பாஜகவுடன் உறவில்லை என்றாலும், பகையில்லை என்பதால் இப்போதைக்கு ஜெகனை சிபிஐ நெருங்காது. இதெல்லாம் தந்த மனநிறைவில், நன்றிக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் இஸ்ரேலில் உள்ள இயேசுநாதர் பிறந்த இடமான பெத்லகேமுக்கு ஆகஸ்ட் துவக்கத்தில் நான்கு நாட்கள் தனிப்ப்பட்ட பயணம் மேற்கொள்கிறார். பின் அங்கிருந்து திரும்பியபின், சுதந்திர தினத்தில் முதன்முறையாக கொடியேற்றிவிட்டு, அவருடைய மகளை அமெரிக்க கல்லூரியில் சேர்ப்பதற்கு திரும்பவும் குடும்பத்துடன் அமெரிக்கா செல்கிறார். மெஜாரிட்டி இருக்கு, மத்திய அரசு சப்போர்ட் இருக்கு, ஜெகனால நிம்மதியா வெளிநாடு போக முடியுது. நம்மாளுக்கு நிம்மதியா வெளிக்கிக்கூட போகமுடியல, டெலிகேட் பொசிஷ‌ன்!