உனக்கு வயசே ஆகாதா? நடிகர் ஜெயம் ரவியின் லுக்கை பார்த்து பிரமித்து போன பிரபல நடிகை!

 

உனக்கு வயசே ஆகாதா?  நடிகர்  ஜெயம் ரவியின் லுக்கை பார்த்து பிரமித்து போன பிரபல நடிகை!

நடிகை ஜெனிலியா  நடிகர் ஜெயம் ரவி இன்னும் இளமையாக இருப்பதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார். 

சென்னை:  நடிகை ஜெனிலியா  நடிகர் ஜெயம் ரவி இன்னும் இளமையாக இருப்பதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார். 

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் கோமாளி.  இதில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கவுள்ளார். இதில் நடிகைகள்  காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

 

இந்நிலையில் கோமாளி படத்தின் புரொமோஷனுக்காக தினம் ஒரு போஸ்டரை  படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று படத்தின் ஒன்பதாவது போஸ்டர் வெளியானது. இதை கண்ட பிரபல நடிகை ஜெனிலியா, என்ன இது ஜெயம் ரவி? உனக்கு வயசே ஆகாதா. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞன் போல தோற்றமளிக்கிறீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக நடிகை  ஜெனிலியா நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.