உனக்கு யாரு ஆதரவளிச்சா? வீடியோ வெளியிட்டு அசிங்கப்பட்ட மீரா மிதுன்! 

 

உனக்கு யாரு ஆதரவளிச்சா? வீடியோ வெளியிட்டு அசிங்கப்பட்ட மீரா மிதுன்! 

வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை ரசிகர்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.

சென்னை : வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை ரசிகர்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளராகப் பங்கேற்றார் மீரா மிதுன். இவர் நுழைந்தது சக போட்டியாளர்களான அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோருக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதால் பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பலரிடம் பிரச்சனை செய்து வந்த மீரா மிதுன் ஒரு வழியாக கடந்த வாரம் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த உடனே உங்களைச் சந்திக்க நினைத்தேன். ஆனால் வேலை இருந்ததால் சந்திக்க முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்த 5 வாரங்களும் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி . நான் என்ன செய்தாலும் குறை கூறும் ரசிகர்களுக்கும் நன்றி. உங்களுக்காக நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்துள்ளேன். என் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீராவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ‘உனக்கு எப்போது நாங்கள் ஆதரவளித்தோம்’ என்றும் கடுமையாகக் கேள்வி கேட்டுள்ளனர்.