உனக்கு நீயே ஒளியாய் இரு

 

 உனக்கு நீயே ஒளியாய் இரு

ஒரு அடர்ந்த காட்டில் இரண்டு நண்பர்கள் நடந்துப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவரின் கைகளில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. இன்னொருவரிடம் விளக்கு இல்லை. ஆனால், இரண்டு பேரும் ஒரே பாதையில் நடந்துச் சென்றதால் அவர்களின் பாதை முழுக்கவே  வெளிச்சமாகவே இருந்தது. 

ஒரு அடர்ந்த காட்டில் இரண்டு நண்பர்கள் நடந்துப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவரின் கைகளில் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. இன்னொருவரிடம் விளக்கு இல்லை. ஆனால், இரண்டு பேரும் ஒரே பாதையில் நடந்துச் சென்றதால் அவர்களின் பாதை முழுக்கவே  வெளிச்சமாகவே இருந்தது. 

two friends

தனக்கென்று தனியாக விளக்கு எதுவும் வைத்திருக்காத நபரும் நண்பனின் விளக்கொளியில் சந்தோஷமாகவே பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருந்தான். அவனுக்கு விளக்கு பற்றிய சிந்தனை கூட பாதையெங்கும் எழவே இல்லை. 

அவர்கள் இருவரும் அடர்ந்த அந்த வனாந்திரத்தின் வெளியே ஒரு கூட்டு சாலைக்கு வந்து சேர்ந்தனர். இப்பொழுது இருவரும் பிரிய வேண்டிய நேரம் வந்திருந்தது. கைகளில் விளக்கை வைத்திருந்தவன் இன்னொருவனிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்று விட்டான்.

அவன் சென்றதும், விளக்கில்லாதவனைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. இத்தனை நேரம் இருளைப் பற்றி யோசிக்காதவனின் மனதில் இப்பொழுது பயமும் கவ்வ ஆரம்பித்தது. கவலையில் அந்த மனிதன் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான். 

‘ஒரு விளக்கை என்னால் தனியாக ஏற்பாடு செய்துக் கொள்ள முடியாமல் போனது எதனால்? விளக்கை எப்படிப் பற்ற வைக்க வேண்டுமென்று கூட எனக்குத் தெரியாதே? சின்னஞ்சிறிய விளக்காக இருந்திருந்தாலும் கூட அது என்னுடையதாக இருந்திருக்கும். ஆனால், எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தது எத்தனை மடத்தனம். 

இதுவரை வந்த வழி வெளிச்சமாகத் தானே இருந்தது. ஆனால் இப்போது?
’இப்படித் தான் நண்பர்களே… பல முறை நடக்கிறது. அகத்தில் விளக்கொளிரும் ஒருவரை நீங்கள் பார்க்கும் போது உடனடியாக உங்களுக்காக ஒரு கதவு வரவேற்று சந்தோஷமாக திறக்கப்படலாம். கதவைத் திறந்த மாத்திரத்திலேயே உங்களது பாதை எங்கும் சுடரேற்றப்படும். அப்படி நடக்குமென்று ஒரு நிமிடத்திற்கு முன்னர் கூட நம்பியிருக்க மாட்டீர்கள். 

ஆனால், அது உங்களுடைய விளக்கு அல்ல. அதனால் அந்த நொடியிலேயே, அந்த விளக்கின் வெளிச்சம் உங்களது நினைவாக மாறிவிடும். அது பறிபோகும் போது உங்களை அந்த நினைவு உங்களைத் துன்புறுத்தி துரத்தத் தொடங்கி விடும். மீண்டும் மீண்டும் அந்த ஒளி சுடர்ந்த பாதைக்குத் திரும்பச் செல்வதைப் பற்றிய எண்ணம் உங்களைத் துரத்தும். ஆனால், திரும்பச் செல்லும் பாதை இல்லவே இல்லை. திரும்பிச் செல்வதற்கான தேவையும் இல்லை. நீங்கள் முன்னோக்கித் தான் செல்ல வேண்டும். உங்களது சொந்த வெளிச்சத்தை நீங்கள் தான் தேடிக் கண்டடைய வேண்டும். கண்டும் அடைவீர்கள்.
இதைத் தான் ‘உனக்கு நீயே ஒளியாக இரு’