உனக்காக வாழ நினைக்குறேன்.. உசுரோட வாசம் பிடிக்குறேன்..! அசத்தும் பிகில் பாடல் 

 

உனக்காக வாழ நினைக்குறேன்.. உசுரோட வாசம் பிடிக்குறேன்..! அசத்தும் பிகில் பாடல் 

விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளா நிலையில் இன்று உனக்காக என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளா நிலையில் இன்று உனக்காக என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

அட்லீ இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரு வேடத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தெறி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் விஜய்-அட்லீ கூட்டணியில் அமையும் இரண்டாவது படம் இது. இத்திரைப்படம் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவணம் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று மாலை உனக்காக என்ற மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றூம் மதுரா தாரா தல்லூரி பாடியுள்ளனர். இதனை விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் #UNAKAGA என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி ட்ரெண்ட்டாக்கி வருகின்றனர் 

bigil

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாலை மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பிகில் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் விஜய் பாடலாம் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.