உத்திர பிரதேச மாநிலத்துக்கு நடந்தே செல்ல முயற்சித்த இளைஞர்கள்.. தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்

 

உத்திர பிரதேச மாநிலத்துக்கு நடந்தே செல்ல முயற்சித்த இளைஞர்கள்.. தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்

ஆனால் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் அவர்கள் உணவுக்கு தவித்து வந்துள்ளனர். 

கொரோனா வைரஸால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. அதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து பணிபுரிபவர்கள் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் தக்கோலம் அருகே சாலை ஓரங்களில் விற்பனை செய்து வந்த 20க்கும் மேற்பட்ட வெளிமாநில இளைஞர்கள் ஒரு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். ஆனால் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் அவர்கள் உணவுக்கு தவித்து வந்துள்ளனர். 

ttn

இதன் காரணமாக சொந்த ஊரான மத்திய பிரதேசத்துக்கு நடந்தே செல்ல முடிவெடுத்த அந்த இளைஞர்கள், அரக்கோணத்தில் இருந்து திருத்தணி வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களை வழிமறித்த வருவாய்த்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சொந்த ஊருக்கு அவர்கள் நடந்தே செல்ல முடிவெடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய வருவாய்த் துறையினர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.