உத்திரம் நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்கள் மற்றும் வழிபாட்டு கோயில்கள் 

 

உத்திரம் நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்கள் மற்றும் வழிபாட்டு கோயில்கள் 

உத்திரம் நட்சத்திரகாரர்களின் இயல்பான குணாதிசயங்கள் மற்றும் வழிபாட்டு கோயில்கள் பற்றி பார்போம்.

பிறர் செய்த உதவிகளை நன்றியோடு நினைத்து பார்க்கும் பண்பு கொண்டவர்கள் உத்திரம் நட்சத்திரகாரர்கள். இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை.

siva

கட்டடத்துக்கு வித்யாதரன்வலுசேர்க்கும் உத்திரத்தைப் போல பெற்றோருக்கு உறுதுணையாக எப்போதும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும், 2, 3, 4 – ம் பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்திருக்கின்றன.

இந்த நட்சத்திரகாரர்கள் ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

siva2

லட்சியவாதியான இவர்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பார்கள்.

உங்களது தொழிலை அடிக்கடி மாற்றுவது உங்களுக்கு பிடிக்காது. எதையும் நிலையான தன்மையுடன் செய்வது உங்களுக்கு பிடிக்கும். யாரையாவது நண்பராக அடைந்தால் காலம் முழுவதும் அந்த நட்பை தொடருவீர்கள்.

siva

இவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரகாரர்களின் பலர் முன்கோபியாகவும் இருப்பார்கள். சில செயல்களைத் தன்னால் மட்டும்தான் செய்ய முடியும், வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்று எண்ணும் சிந்தனை உடையவர்கள்.

எப்போதும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். இந்த குணத்தால் நீங்கள் எப்போதும் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

சில விஷயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் திகழ்வீர்கள். எதையும் நேர்மையாகவும், உண்மையாகவும் செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.

siva

உங்களது செல்வம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி மற்றவருக்கு உதவ தயங்க மாட்டீர்கள். பணத்தை சேமிப்பதில் திறமையானவர் நீங்கள். கூடுதலாக மூதாதையர் சொத்துக்களையும் பெறுவீர்கள்.

அரசியல், இசை, விளையாட்டு,பாராளுமன்ற உறுப்பினர், மீடியா அல்லது மக்கள் தொடர்பு பணி ஆகிய பல்வேறு துறைகளில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியும்.

siva

உங்களது வாழ்க்கை துணை குடும்ப நிர்வாகத்தில் சிறந்தவராக இருப்பார். அமைதியும் சாந்தமான பேச்சும் கொண்டவராக அவர் இருப்பார்.

கணிதம் அல்லது அறிவியலில் ஆர்வம் கொண்டவராகவும் அதில் வெற்றிபெறுபவராகவும் இருப்பார். மொத்தத்தில் இறைவனின் கருணையினால் ஒரு பரி பூரண வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம் : சிவன், சூரியன்,முருகன் 

வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் : சூரியனார் கோயில்,கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், திருவலிதாயம்,மதுரை மீனாட்சியம்மன்,சுவாமிமலை.