உத்திரபிரதேச தங்கமலை ரகசியம்..! ஒரு சரித்திர சோகத்தின் சாட்சி.!

 

உத்திரபிரதேச தங்கமலை ரகசியம்..! ஒரு சரித்திர சோகத்தின் சாட்சி.!

ஒருகாலத்தில் இந்தக் கோட்டையில் அமர்ந்து இந்த சோன் பத்தரா பகுதியை பால்ஷா என்கிற அரசனும், அவனது அழகிய மனைவியான ஜுராகியும் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ராஜியம் செழித்திருந்தது பால்ஷாவின் அரண்மனையில் தங்கம் கொட்டிக் கிடந்தது. அதில் பொறாமை கொண்ட சாந்தல் அரசன் படை எடுத்து வந்தான்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆசைப்பட்டது போல அந்த சோன்பத்தரா மலையில் 33 ஆயிரம் டன் தங்கம் கிடைத்திருந்தால் இன்று ட்ரம்ப்பை வரவேற்க யாராவது ஒரு ஜூனியர் அமைச்சரை அனுப்பி இருபார்கள், நல்ல வேளை ட்ரம்ப்பின் மானம் காக்கப்பட்டது.

ஆனால், அந்த மலை, அந்த மாவட்டம், அருகில் ஓடும் ஆறு எல்லாவற்றுக்கும் தங்கம் என்று பொருள்படும் ‘ சோன்’ என்கிற சொல்லில் துவங்கும் பெயர்களே இடப்பட்டு இருப்பது ஏன்? இந்தக் கேள்விக்குப் பின்னால் ஒரு சோகமான சரித்திர சம்பவம் இருக்கிறது. அதற்கு சாட்சியாக நிற்கிறது அகோரி கோட்டை என்கிற ஒரு பாழடைந்த கோட்டை.

aghori-fort

ஒருகாலத்தில் இந்தக் கோட்டையில் அமர்ந்து இந்த சோன் பத்தரா பகுதியை பால்ஷா என்கிற அரசனும், அவனது அழகிய மனைவியான ஜுராகியும் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ராஜியம் செழித்திருந்தது பால்ஷாவின் அரண்மனையில் தங்கம் கொட்டிக் கிடந்தது. அதில் பொறாமை கொண்ட சாந்தல் அரசன் படை எடுத்து வந்தான்.அவனிடம் போரில் தோற்ற பால்ஷா தன்னிடம் இருந்த தங்கத்தையும், மனைவி ஜுராகியையும் கொண்டுபோய் காட்டில் பதுக்கிவைத்து மறைந்து வாழத் துவங்கினான்.

சாந்தல்கள் மறுபடி படை எடுத்து வந்தபோது பால்ஷாவை ஏதோ வன விலங்கு கொன்றுவிட்டதை அறிந்து தங்கத்தைத் தேடினார்கள் தங்கம் கிடைக்கவில்லை. ஆனால்,பால்ஷாவின் மனைவி ஜுராகி கிடைத்தாள்.அவளைத் தூக்கி வந்து ஜுகாலி கிராமத்தில் சிறை வைத்து விசாரித்தார்கள். அவள் வழிக்கு வராததால் சாந்தல்கள் அவளைக் கொலை செய்து விட்டார்கள். அன்று பால்ஷா காட்டில் பதுக்கிய தங்கம் இன்றைய கணக்கில் 4000 கிலோ.

gold

இப்போது கொலை செய்யப்பட்ட ஜுகாரிக்கு கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள். வேட்டைக்குப் போன கார்வார்காரன் ஒருவன் ஒரு குகையில் இருந்து பால்ஷாவின் போர் கவசத்தையும்,உடைவாளையும் எடுத்து வந்திருக்கிறான். எல்லாம் இப்போதும் இருக்கின்றன. இதே சோன்பத்தரா மாவட்டம் ராஜ்பூரில் இருக்கும் பால்ஷா வழிவந்த அடிசான் பிரம்ம ஷா என்பவரிடம் அகோரி கோட்டை உட்பட இந்தக் காட்டுப் பகுதிக்கான உரிமைப் பத்திரம் இருக்கிறது. ஆனால்,பால்ஷா பதுக்கி வைத்த 4 டன் தங்கம் எங்கே?.என்ற கேள்விக்கு பல நூற்றாண்டுகளாக பதில் இல்லை.தங்கத்தைத் தேடித்தேடி ஆடு மேய்கும் சிறார்கள் பாதி அரண்மனையைப் பெயர்த்து விட்டார்கள்.