உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா ஏற்பாடு! – மும்பை போலீஸ் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

 

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா ஏற்பாடு! – மும்பை போலீஸ் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு சில கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்களை மும்பை போலீஸ் வெளியிட்டுள்ளது

maharastra

.மகாராஷ்டிராவில் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் முடிந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை முதல்வராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி தாதர் சிவாஜி பார்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
விழாவில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், விவாசயிகள், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதிக அளவில் தொண்டர்கள், மக்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

stalin

இந்த நிலையில், மக்கள் கூட்டத்தை எதிர்கொள்ள மும்பை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். விழாவில் பங்கேற்க உள்ளவர்களுக்கான வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகளை மும்பை போலீஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
விழாவில் பங்கேற்க உள்ளவர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அவரவருக்கான இடத்தில் அமர வேண்டும், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பார்கிங் இடத்திலேயே வண்டியை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

police

யார் யாருக்கு என்ன பாஸ்?
வெள்ளை பாஸ் – பொது மக்கள், மஞ்சள் பாஸ் – பத்திரிகையாளர்கள், சிவப்பு பாஸ் –  அரசியல் கட்சி மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ-க்கள், பிங்க் பாஸ் – அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆரஞ்சு பாஸ் – விவசாயிகள். 
போக்குவரத்து மாற்றம்:
மாலையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க விரிவான ஏற்பாடுகளையும் மும்பை போலீஸ் செய்துள்ளது. பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை சுற்றுவட்டார சாலைகளைப் பயன்படுத்தாமல் மாற்று சாலைகளை பயன்படுத்தும்படி போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. பல சாலைகள் ஒருவழியாக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது