உத்தர பிரதேசம் போல் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் சுட்டு தள்ளுவோம்…. மிரட்டும் பா.ஜ.க. தலைவர்……

 

உத்தர பிரதேசம் போல் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் சுட்டு தள்ளுவோம்…. மிரட்டும் பா.ஜ.க. தலைவர்……

உத்தர பிரதேசம் போல் மேற்கு வங்கத்திலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களை சுட்டு தள்ளுவோம் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலம் நாடியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். 

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்

ஆனால், பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது முதல்வர் மம்தா பானர்ஜி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுக்கவும் அவர் விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் அவரது வாக்காளர்கள். பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் அது யாருக்கு சொந்தமானது என்று நினைக்கிறார்கள்? அவர்களது தந்தைகளுக்கு சொந்தமானதா? பொது சொத்துக்கள் வரி செலுத்துபவர்களுக்கு சொந்தமானது.

உ.பி.யில் வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி

அசாம், உத்தர பிரதேசத்தில் எங்களது அரசுகள் வன்முறையில் ஈடுபட்டவர்களை நாயை சுடுவது போல் சுட்டு தள்ளியது. நீங்க இங்க வாறீங்க, எங்க உணவை சாப்பிடுறீங்க மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துறீங்க. இது உங்க பண்ணை நிலமா? நாங்கள் உங்களை லத்தியால் கடுமையாக அடிப்போம், சுடுவோம் மற்றும் ஜெயிலில் அடைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.