உத்தர பிரதேசத்தில் சூடு பிடிக்கும் பேனர் விவகாரம்……என்னது சட்டம் இல்லையா….. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்த அமைச்சரவை…

 

உத்தர பிரதேசத்தில் சூடு பிடிக்கும் பேனர் விவகாரம்……என்னது சட்டம் இல்லையா….. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்த அமைச்சரவை…

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான அம்மாநில அமைச்சரவை, பொது சொத்துக்களுக்கான சேதத்துக்கு இழப்பீடு பெறும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பேனர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டமும் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததையடுத்து உ.பி. அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் பெயர், போட்டோ உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பேனர்களை உடனடியாக நீக்கும்படி அம்மாநில அரசுக்கு அலகாபாத் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெஷல் லீவ் மனுவை (எஸ்.எல்.பி.) தாக்கல் செய்தது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பேனர்

பேனர் விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளின் பெயர், போட்டோ உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பேனர்களை பொது இடங்களில் வைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டமும் இல்லை. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது மேலும் இந்த விவகாரத்தில் விரிவாக்கம் மற்றும் பரிசீலனை தேவை என்பதால் இந்த மனு விசாரிக்க பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.

அவசர சட்டம்

இதனையடுத்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை நேற்றுமுன்தினம் பொது சொத்துக்களின் சேதத்துக்கு இழப்பீடு பெறும்  அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம், மாநிலத்தில் வன்முறை சம்பவங்களின் போது பொது சொத்துக்களை அழித்தல் மற்றும் நாசம் செய்த குற்றவாளிகளிடமிருந்து இழப்பீடு பெற வழி செய்யும். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த நடவடிக்கையால் கலவரர்காரர்கள் கடும் கிலியில் உள்ளனர்.