உத்தர பிரதேசத்தில் ஒரே ஒரு நபரால் தனிமைப்படுத்தப்பட்ட 14 கிராமங்கள்…..

 

உத்தர பிரதேசத்தில் ஒரே ஒரு நபரால் தனிமைப்படுத்தப்பட்ட 14 கிராமங்கள்…..

உத்தர பிரதேசத்தில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதால், அவர் தங்கியிருந்த கிராமத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 14 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் பவானிபூர் காலி பகுதியில் உள்ள மசூதியில் ஆந்திர பிரதேசத்தை ஒருவர் தங்கி இருந்தார். அவர் கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாஅத் மதமாநாட்டில் கலந்து கொண்டவர். இவருக்கு  கொரோனா தொற்று இருக்கா, இல்லையா என்பதை கண்டறிய பரிசோதனை நடைபெற்றது. 

லக்கோனவில் போலீசார் வாகன சோதனை

பரிசோதனை முடிவில், அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர் தங்கியிருந்த கிராமத்தை சுற்றி 3 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கிராமங்களும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

கொரோன வைரஸ் பரிசோதனை ( கோப்பு படம்)

படான் மாவட்ட கலெக்டர் குமார் பிரசாந்த் இது கூறுகையில், சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தங்கியிருந்த கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் 14 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.