உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

 

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து அம்மாநிலத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஆக்சிஜன் பற்றாக்குறையால் பிஞ்சு குழந்தைகள் இறந்தது, சட்டமன்றத்தில் வெடிகுண்டு எடுக்கப்பட்டது என தொடர்ந்து சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை  கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசே‌ஷ நாட்கள் வருகின்றன. அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவது வழக்கம். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி தரிசனம் செய்வார்கள்.

இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கி செல்வார்கள். அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் என கருதி ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் உத்தரபிரதேசத்தில் திருமணம் நடத்த தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கூறப்பட்டுள்ளது.  முதல்வர் யோகியின் இந்த உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.