உத்தரகண்ட் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய புதிய துலிப் தோட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்

 

உத்தரகண்ட் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய புதிய துலிப் தோட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்

உத்தரகண்ட் மாநிலத்தில் இடம்பெற்றுள்ள உலகின் மிகப்பெரிய புதிய துலிப் தோட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

டெஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் இடம்பெற்றுள்ள உலகின் மிகப்பெரிய புதிய துலிப் தோட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சுற்றுலா தலமான முன்சாரியில் உள்ள துலிப் தோட்டத்தின் புகைப்படங்களை உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவை உடனடியாக ட்விட்டரில் வைரலாகி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பலபேரை ஈர்த்தன.

துலிப் தோட்டத்தின் படங்களைப் பார்த்த அப்துல்லா தனது ட்வீட்டில் “பஞ்சச்சுலி வரம்பின் பின்னணியில் வளர்க்கப்படும் டூலிப்ஸ் அழகாக இருந்தாலும் அவை ஸ்ரீநகரின் துலிப் தோட்டத்தைப் போல அழகாக இல்லை” என்று கூறினார்.

1,200 சதுர மீட்டர் பரப்பளவில் பைலட் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஹாலந்தில் இருந்து சுமார் 7,000 துலிப் பல்புகள் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் வளர்ந்து வந்தன என்று பிரதேச வன அலுவலர் வினய் பார்கவா கூறினார்.

முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ் பந்த் தான் இந்த யோசனையை முதலில் கொண்டு வந்தார். ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் இறந்த பிறகு, பார்கவா இந்த திட்டம் குறித்து முதல்வர் முன் விளக்கமளித்தார். அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.