உதை வாங்கிய உதயநிதி

 

உதை வாங்கிய உதயநிதி

உதை வாங்கிய உதயநிதி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்று அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகில் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் நாடாளுமன்ற நிதி்யில் கட்டப்பட்டிருக்கும் அரங்க மேடையில் பேசினார்.

உதை வாங்கிய உதயநிதி

உதயநிதிக்காக மேடையை அலங்கரித்தபோது, சுண்ணாம்பு பூசும்போது மூப்பனாரின் பெயரை அழித்துவிட்டனர். அந்த மேடையில் இருந்த மூப்பனார் பெயர் அழித்திருப்பதை கண்டு ஆத்திரப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், அரியலூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மதியம் 2 மணியளவில் திருமானூர் வந்தபோது, அவரது பிரச்சார வாகனத்தை மறித்து ஆவேசமாக பாய்ந்தனர்.

பின்னர் பாதுகாவலர்களும், போலீசாரும் வந்த தமாகவினரை சமாதானப்படுத்திவிட்டு, உதயநிதி வாகனத்தை புறப்படச்செய்தனர்.

இந்த விவகாரத்தை அடுத்து, #உதைவாங்கியஉதயநிதி என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகிறார்கள் டெட்டிசன்கள்.

உதய்னா பேரு வச்சதுக்கு இப்படி உத வாங்கிட்டே இருக்கியேடா என்றும், எவ்வளவு வாங்கிருக்கேன் இவனுங்க கிட்ட . இத சொல்லி ஓட்டு கேட்டுடோம்னா இரக்கப்பட்டு என்னைய CM ஆக்கிடுவானுங்க… என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://twitter.com/savukky/status/1342344380565184513