உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு… கலகலக்கும் பா.ஜ.க வட்டாரம்..!

 

உதயநிதி ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு… கலகலக்கும் பா.ஜ.க வட்டாரம்..!

திமுக இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவு பாஜக வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலின்  எடுத்துள்ள அதிரடி முடிவு பாஜக வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனை நடைபெற்றது.  திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். stalin

திமுக இளைஞரணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்யும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. உள்ளாட்சி மன்ற தேர்தலில் இளைஞரணியில் இருந்து பலருக்கு வாய்ப்பு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது. அது தொடார்பாக இன்று ஆலோசிக்கப்படும், திமுக இளைஞரணியில் முக்கிய மாற்றங்கள் இன்று செய்யப்பட்டுள்ளது. 

அதில் திமுக இளைஞர் அணியில் 15 முதல் 30 வயதுள்ளோர் இளைஞரணியில் உறுப்பினராகலாம் என்ற விதியை மாற்றி, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்று தலைமைக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உறுப்பினர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.stalin
 
அதனை தொடர்ந்து திமுக இளைஞரணி அமைப்பு மண்டலம் வாரியாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் செய்யப்படும். அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல மாநாடு நடத்தப்படும். அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்தபின், மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடத்தப்படும் என்பதையும் அறிவித்தார்.
 
 இந்த ஆண்டு செப்டம்பர் 14- ஆம் தேதி முதல் நவம்பர் 14- ஆம் தேதி வரை 2 மாதங்களுக்குள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் பேருக்குக் குறையாமல் ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என உதயநிதி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். மாவட்டந்தோறும் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், அரசு வேலையில் தமிழருக்கு முன்னுரிமை, தேசியக் கல்விக்கொள்கை வரையரையை திரும்ப பெற வேண்டும், தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும் இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.stalin 

ஏற்கெனவே பாஜக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்களை கடந்த ஒரு மாத காலமாக நடத்தி  வருகிறது. இந்நிலையில் உதயநிதி புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கச் சொல்லி இருப்பது பாஜகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.