உதயநிதியை அலேக்காக அள்ள திட்டம்… அதிர வைக்கப்போகும் அமித் ஷா..!

 

உதயநிதியை அலேக்காக அள்ள திட்டம்… அதிர வைக்கப்போகும் அமித் ஷா..!

திமுக தலைவர் மு க ஸ்டாலின், திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு இரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் மு க ஸ்டாலின், திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு இரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

udhayanidhi

இதற்கு காரணம் குறித்து விசாரிக்கையில் திமுக இளைஞரணி சார்பில் கடந்த 13ம் தேதி என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நகலைக் கிழித்து எறிந்தார்.

stalin

இதனைத் தொடர்ந்து அக் கட்சியின் தொண்டர்களும் கிழித்தெறிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக இளைஞர் அணியினர் மொத்தம் 644 பேர் கைது செய்ய தமிழக காவல்துறை அன்று மாலை அவர்களை விடுவித்து விட்டது. உதயநிதி ஸ்டாலின் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து அதற்காக தமிழக காவல்துறை கைது செய்தது என இந்த தகவல் மத்திய உளவுத்துறை மூலம் உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் எடுத்து உடனே தமிழக அரசை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சகம் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் கேட்டுள்ளது. Amit shah

அடுத்து 23ம் தேதி மிகப்பெரிய பேரணியை திமுக நடத்தியது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பழனிசாமி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து காவல்துறை உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்களுக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 23ம் தேதி போராட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட 8000 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது அதற்கு முன்பாக அவரை கைது செய்யக்கூடும் என்கிறார்கள். ஆனால்  அதுவே உதயநிதி ஸ்டாலினுக்கும் சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக செயல்பட்டு வருகிறது அதிமுக அரசு.