உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விசிக, மதிமுகவுக்கு அழுத்தம்?!..

 

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விசிக, மதிமுகவுக்கு அழுத்தம்?!..

மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ள விசிக, மதிமுக கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி திமுக தரப்பு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ள விசிக, மதிமுக கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி திமுக தரப்பு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிகள் பிரிப்பது மற்றும் வெற்றி பெறுதற்கான திட்டம் வகுப்பது என அத்தனை கட்சிகளும் பிஸியாக இருக்கிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ள விசிக, மதிமுக கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி திமுக தரப்பு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்தமுறை நிச்சயமாக ஜெயித்துவிட வேண்டும் என்ற சூழல் திமுக தரப்புக்கு அதிகமாக உள்ளது. 

உதயசூரியன் சின்னம் ஏன்?

திமுக

சின்னம் என்பது அரசியல் கட்சிகளின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கிறது. நிரந்தர சின்னத்தை பெற 7 சட்டமன்ற தொகுதிகள் அல்லது 2 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும். விசிக, மதிமுக கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் கிடையாது, போனமுறை விசிகவுக்கு கிடைத்த மோதிர சின்னம் இந்தமுறை மறுக்கப்பட்டுள்ளது.

திருமா

மதிமுகவுக்கு பம்பரம் கிடைக்குமா என்பது சந்தேகம். திமுகவுக்கு உதயசூரியனும், அதற்கு போட்டியாய் இருக்கும் அதிமுகவுக்கு இரட்டை இலையும் நீண்டகாலமாய் உள்ள நிரந்தர சின்னம். இரட்டை இலை மீது கூட டிடிவி தினகரனால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

தேர்தலில் ஜெயிப்பதற்காக ஒரே பெயரில் வேட்பாளர்களை அறிவிப்பது, சின்னத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவது என பல்வேறு வேலைகளை இங்குள்ள அரசியல் கட்சிகள் சில தொடர்ந்து செய்து வருகிறது. இப்படியான சூழலை தவிர்க்கவே திமுக தரப்பு உதயசூரியன் சின்னத்தில் மட்டுமே நிற்க வேண்டும் என விசிக, மதிமுக கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லால் தேர்தல் செலவுகளிலும் விசிக, மதிமுக கட்சிகளுக்கு திமுக தரப்பு பெரும் பங்காற்றும் என சொல்லப்படுகிறது. 

விசிக, மதிமுக தொண்டர்களில் சிலரே உதயசூரியன் சின்னத்தில் நிற்பதே சரியாக இருக்கும் என நினைக்கின்றனர். எனினும் விசிக, மதிமுக தலைமை தங்கள் கட்சி உறுப்பினர்களோடு கலந்து ஆலோசனை செய்துவிட்டு முடிவை கூறுவதாக கூறியிருக்கிறார்களாம், இந்த இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கவே அதிகமான வாய்ப்புள்ளது.