உதகையில் 29 வயது இளம் மருத்துவ அலுவலர் கொரோனாவால் உயிரிழப்பு

 

உதகையில் 29 வயது இளம் மருத்துவ அலுவலர் கொரோனாவால் உயிரிழப்பு

உதகையில் 29 வயது இளம் மருத்துவ அலுவலர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்தார்.

உதகை: உதகையில் 29 வயது இளம் மருத்துவ அலுவலர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரிழந்து வருகின்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா தடுப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வாறு உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபடுபவர்களின் குடும்பத்தினரும் கொரோனா தாக்கும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சுகாதார ஊழியர்களுக்கு கையுறை, முககவசம் ஆகியவை போதிய அளவில் கிடைப்பதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், உதகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஜெயமோகன் என்ற 29 வயது இளம் மருத்துவ அலுவலர் கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து கோயமுத்தூர் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் நேற்று அதிகாலை ஜெயமோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி சுகாதார மாவட்டம் தெங்குமரஹடா ஆரம்பசுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலராக ஜெயமோகன் பணியாற்றி வந்தார். அவர் பன்னிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர் ஆவார். மலைப் பகுதியில் இருக்கின்ற சிறிய கிராமத்தில் பரிசல் மூலமாக கடந்து செல்ல வேண்டிய பணியிடத்தில் அரசு மருத்துவ அலுவலராக அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.