உணவு பொருட்கள் விநியோகிக்கும்போது போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது…. ராஜஸ்தான் அரசு உத்தரவு…..

 

உணவு பொருட்கள் விநியோகிக்கும்போது போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது…. ராஜஸ்தான் அரசு உத்தரவு…..

உணவு மற்றும் உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கும்போது போட்டோ, வீடியோ எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. மேலும் உணவு மற்றும் உணவு பொருட்கள் விநியோகம் செய்ய முகாம்கள் அமைக்கவும் அனுமதி கிடையாது எனவும் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு தனிநபர்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் உணவு மற்றும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் விநியோகம் செய்ய முகாம்கள் அமைக்க அனுமதி கிடையாது என முடிவு செய்துள்ளது.

முதல்வர் அசோக கெலாட்
அதற்கு பதிலாக தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தாங்கள் வழங்க இருக்கும் உணவு பாக்கெட்டுகள் மற்றும் உணவு பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து விட வேண்டும். மாவட்ட நிர்வாகம் தேவைப்படும் மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவற்றை விநியோகம் செய்யும். இருப்பினும் உணவு மற்றும் உணவு பொருட்கள் அளிப்பவர்கள் தங்களது பெயர் மற்றும் படங்கள் குறித்த விவரங்களை அந்த பாக்கெட்டுகளில் ஸ்டிக்கர் அல்லது துண்டு பிரசுரங்களாக வைக்கலாம்.

உணவு பார்சல்கள்

இதுதவிர உணவு மற்றும் உணவு பொருட்களை விநியோகம் செய்யும் போது போட்டோ அல்லது வீடியோ எடுக்கவும் மாநில அரசு தடை விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகமே நேரடியாக தேவைப்படுபவர்களுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கும் என்பதால் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என ராஜஸ்தான் அரசு எதிர்பார்க்கிறது.