உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் : உயர்ந்தது ‘பிரியாணி’ விலை !

 

உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் : உயர்ந்தது ‘பிரியாணி’ விலை !

பிரியாணி விற்கும் ஹோட்டல்களில், பிரியாணி செய்ய வெங்காயம் அத்தியாவசியமான பொருள் என்பதாலும் அதிக அளவில் தேவைப்படுவதாலும் இந்த வெங்காய விலை உயர்வு ஹோட்டல் நடத்துபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டுகளான கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் போன்ற இடங்களில் வெங்காய வரத்து குறைந்துள்ளது. வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யும் இடங்களில் அதிக மழை பெய்து வருவதே இதற்குக் காரணம்.

onion

அதனால், கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் வெங்காய விலை அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 90 முதல் 100 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 150 முதல் 180 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

biriyani

மக்கள் மட்டுமின்றி வெங்காய விலை உயர்வால் ஹோட்டல் நடத்துபவர்களும் தவித்து வருகின்றனர். முக்கியமாகப் பிரியாணி விற்கும் ஹோட்டல்களில், பிரியாணி செய்ய வெங்காயம் அத்தியாவசியமான பொருள் என்பதாலும் அதிக அளவில் தேவைப்படுவதாலும் இந்த வெங்காய விலை உயர்வு ஹோட்டல் நடத்துபவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஈடுகட்ட, ஹோட்டல்கள் பிரியாணி கணிசமாக விலையை உயர்த்தியுள்ளன. 

biryiyani

சென்னையில் நடுத்தர உணவகங்களில் சிக்கன் பிரியாணி 200 ரூபாயாகவும் மட்டன் பிரியாணி 250 ரூபாயாகவும் உள்ளது.

biriyani

உயர்தர உணவகங்களில் சிக்கன் பிரியாணி 300 ரூபாயாகவும் மட்டன் பிரியாணி 350 ரூபாயாகவும் உள்ளது. சாலையோர உணவகங்களில் சிக்கன் பிரியாணி 120 முதல் 140 ரூபாய்க்கும் மட்டன் பிரியாணி 150 முதல் 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

biriyani

இது வழக்கமாக விற்கப்பட்டு வந்த விலையை விட 50 முதல் 100 ரூபாய் வரை அதிகமானது ஆகும். வெங்காய தட்டுப்பாட்டால் பிரியாணி விலை அதிகரித்தது உணவு பிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.