உணவு பஞ்சம்… கம்பீரத்தை இழந்து எலும்பு தோலுமாக உள்ள 5 சிங்கங்கள்…!

 

உணவு பஞ்சம்… கம்பீரத்தை இழந்து எலும்பு தோலுமாக உள்ள 5 சிங்கங்கள்…!

அந்த சிங்கங்கள், சிங்கங்களுக்கான எந்த அடையாளமும், கம்பீரமும் இன்றி, எலும்பும் தோலுமாக பரிதாபத்துக்குரிய நிலையில் காணப்படுகிறது. 

சூடான் தலைநகர்  கார்டூமில் அல் குரேஷி உயிரியல் பூங்கா. அமைந்துள்ளது.  இங்கு பராமரிக்கப்பட்டு வரும் 5 சிங்கங்கள் குறித்து தான் வனவிலங்கு ஆர்வலர்களும் மக்களும் கவலை கொண்டுள்ளனர். காரணம் அந்த சிங்கங்கள், சிங்கங்களுக்கான எந்த அடையாளமும், கம்பீரமும் இன்றி, எலும்பும் தோலுமாக பரிதாபத்துக்குரிய நிலையில் காணப்படுகிறது. 

ttn

இதற்கு மிகமுக்கிய காரணம் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி தானாம்.  இதனால் இதுபோன்ற வனவிலங்குகளுக்கு ஊட்டத்துள்ள உணவுகள் வழங்கப்படவில்லை என்று அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.   இந்த செய்தியை கண்ட வலைதளவாசிகள் Save Animal rescue என்ற ஹேஷ்டேக் மூலம் இந்த ,  5 சிங்கங்களை உயிருடன் காக்க வேண்டுமென்று  கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

ttn

சிங்கங்களைப் பார்த்துப் பிரமித்துப் பழகிய மக்கள் , இந்த சிங்கங்களின் புகைப்படத்தைக் கண்டு வருத்தம் தெரிவித்துவருகிறது கொடுமையானதாக உள்ளது.