உணவு, தங்கும் இடம் கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

 

உணவு, தங்கும் இடம் கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் பேருந்து, ரயில்கள் அனைத்தும் சேவைகளும் முடங்கியுள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் பேருந்து, ரயில்கள் அனைத்தும் சேவைகளும் முடங்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அதன்காரணமாக தமிழகத்திற்கு வந்து வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். 

ttn

இந்நிலையில் இன்று கோவையில் உள்ள சுந்தராபுரம் என்னும் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உணவு, தங்கும் இடம் மற்றும் மருத்துவ வசதி கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகமாக கூடக்கூடாது என்ற நோக்கிலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியுள்ளது. தகவல் அறிந்த போலீசார், அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு அவர்கள் இணங்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.