“உணவு சப்ளை செய்வதுபோல் கஞ்சா விற்பனை” : டெலிவரி ஊழியர் கைது!

 

“உணவு சப்ளை செய்வதுபோல் கஞ்சா விற்பனை” : டெலிவரி ஊழியர் கைது!

 உணவு சப்ளை செய்வதுபோல் கஞ்சா விற்பனை செய்த உணவு நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 உணவு சப்ளை செய்வதுபோல் கஞ்சா விற்பனை செய்த உணவு நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rr

தமிழகத்தில்  2500-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் என பலரும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.  இந்த இக்கட்டான சூழலிலும் தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை கடைகள் திறக்க வைக்கலாம் என்றும் வீட்டில் முடங்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில்  ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு அனுமது அளித்துள்ளது. 

tt

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உணவு சப்ளை செய்வதுபோல் உணவு நிறுவன ஊழியர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.  இவர் நிறுவனத்தின் உணவு பையில் கஞ்சாவை வைத்து  விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.