உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் தவித்த கேரளம்… டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அனுமதி அளித்த தமிழகம்!

உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் தவித்த கேரளம்… டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அனுமதி அளித்த தமிழகம்!

கொரோனா பாதிப்பு காரணமாக மாநில எல்லைகள் மூடப்பட்டன. இதனால், கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து உணவுப் பொருட்கள் செல்வது தடைபட்டது. கேரளா மாநிலம் அரசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தமிழகத்தையே நம்பி இருப்பதால் அம்மாநிலத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் காய்கறி, பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுமதிப்பது என்று கேரள அமைச்சருடனான பேச்சு வார்த்தைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்துள்ளார்..
கொரோனா பாதிப்பு காரணமாக மாநில எல்லைகள் மூடப்பட்டன. இதனால், கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து உணவுப் பொருட்கள் செல்வது தடைபட்டது. கேரளா மாநிலம் அரசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தமிழகத்தையே நம்பி இருப்பதால் அம்மாநிலத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் காய்கறி, பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

tn-kerala-border

இந்த நிலையில் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுடன் நேற்று நடுப்புணி சோதனைச் சாவடியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் கேரளாவுக்கு உணவுப் பொருட்கள் சென்று வருவதை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

pollachi-jayaraman

இது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், “கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலம் என்பதால் இக்கட்டான நேரத்தில் கேரளாவுக்கு தமிழகம் உதவி செய்கிறது. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஒன்பது சோதனைச் சாவடிகள் வழியாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்காக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனுமதிச் சீட்டு வருவாய்த் துறை மூலம் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும். கேரளா செல்லும் ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, பொருட்களை இறக்கிவிட்டுத் திரும்பும்போது வாகனத்தை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிப்பது, ஓட்டுநர் மற்றும் க்ளீனருக்கு உணவு ஏற்பாடு செய்து தருவது உள்ளிட்ட கோரிக்கைகளைக் கேரளா ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்படுகிறது” என்றார்.