உணவின்றி பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்ட திமிங்கலம் பலி ! பிளாஸ்டிக்கால் கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து என மனிதன் அறிவானா?

உணவின்றி பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்ட திமிங்கலம் பலி ! பிளாஸ்டிக்கால் கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து என மனிதன் அறிவானா?

கடலில் தனக்கு தேவையான உணவு கிடைக்காமல் குப்பைகளை சாப்பிட்டு வந்த திமிங்கலம் ஜீரணம் ஆகாமல் கரை ஒதுங்கிய நிலையில் சற்று நேரத்தில் உயிரிழந்தது.

கடலில் தனக்கு தேவையான உணவு கிடைக்காமல் குப்பைகளை சாப்பிட்டு வந்த திமிங்கலம் ஜீரணம் ஆகாமல் கரை ஒதுங்கிய நிலையில் சற்று நேரத்தில் உயிரிழந்தது.

whale

வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரிட்டன் தீவில் உள்ளது ஸ்காட்லாந்து நாடு. இங்குள்ள கடற்கரையில் ஒரு திமிங்கலம் திடீரென்று கரை ஒதுங்கியது. அந்த திமிங்கலத்தை காப்பாற்ற அங்குள்ள சிலர் முயற்சி செய்துள்ளனர். ஆனால் சிறிது நிமிடத்தில் உயிரிழந்தது. தகவல் அறிந்து வந்த மருத்துவர்கள் திமிங்கலம் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தது மட்டுமின்றி அது ஏன் உயிரிழந்தது என தெரிந்து கொள்ள உடற்கூறு ஆய்வு செய்தனர்.

whale

அப்போது திமிங்கலத்தின் வயிற்றை கிழித்து பார்த்தபோது சுமார் 90 கிலோ எடை கொண்ட குப்பைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் மீன் பிடிக்கும் வலைகள் இருந்துள்ளன. இதுமட்டுமின்றி திமிங்கலத்தின் வயிற்றில் மீன் பிடிப்பதற்கு தேவையான பொருட்களும் இருந்துள்ளன. கடல் மிகப்பெரியது நாம் போடும் குப்பை யாரை பாதிக்கப் போகிறது என்றி எண்ணி மனிதன் வீசும் குப்பைகள் கடல்வாழ்உயிரினங்களை பாதிக்கும் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளவேண்டும். சமீபத்தில் சென்னையில் ஒரு பசுமாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து பல கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருட்களை எடுத்ததை யாரும் இன்னும் மறக்கவில்லை.