உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி!

உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி!

உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அந்த உணவக நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அந்த உணவக நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தாஜ்மகால் என்ற ஹோட்டலுக்கு சென்ற ஒருவர் வெளியில் நிறுத்திவிட்டு உணவருந்தியுள்ளார். உணவருந்திவிட்டு வெளியில்வந்து பார்த்தபோது கார் காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த அவர், கார் காணாமல் போனது குறித்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.  தேசிய நுகர்வோர் குறைதிர் ஆணையம், காரின் உரிமையாளருக்கு  2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க  உத்தரவிட்டது. ஆனால் ஹோட்டல் நிர்வாகம் நிவாரணம் வழங்க மறுத்துவிட்டது.

car

இதனால் காரின் உரிமையாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய நுகவர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.