உட்கட்சி பூசல்; அதிமுகவின் சிம்ம சொப்பனத்தை பாமக கையில் கொடுத்த ஓபிஎஸ் – இபிஎஸ்?!

 

உட்கட்சி பூசல்; அதிமுகவின் சிம்ம சொப்பனத்தை பாமக கையில் கொடுத்த ஓபிஎஸ் – இபிஎஸ்?!

அதிமுக உடன் நீண்ட வரலாற்று தொடர்புடைய தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியிருக்கிறது அதிமுக தலைமை.

அதிமுக கட்சியுடன் நீண்ட வரலாற்று தொடர்புடைய தொகுதியை பாமகவுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

அதிமுகவும் திண்டுக்கல் தொகுதியும்

அதிமுக

எம்.ஜி.ஆர் துவங்கிய அதிமுக முதன்முதலாக தேர்தல் களம் கண்டது திண்டுக்கல் தொகுதியில்தால். 1973-ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது, இதில்தான் அதிமுக முதன்முதலாக தேர்தல் களம் கண்டது. எம்.ஜி.ஆர் நிறுத்திய மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதன்பிறகே இரட்டை இலை அதிமுகவின் சின்னம் ஆனது வரலாறு. திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம், இதனை உணர்ந்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அந்தத் தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்ததே இல்லை. திண்டுக்கல் தொகுதியில் அதிமுகதான் அதிகமுறை மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் அந்தத் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக தலைமை.

உட்கட்சி பூசல்

பாமக

திண்டுக்கல் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் தரப்புக்கு இடையே உட்கட்சி பூசல் என கூறப்படுகிறது. நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணனை நிற்க வைக்க அதிமுக தலைமை திட்டமிட்டது. ஆனால் திண்டுக்கல் தொகுதியில் செல்வாக்கு மிக்க சீனிவாசனின் ஆதரவாளர் மருதராஜ் மாவட்ட செயலாளராக இருக்கிறார். அதனால் மாவட்ட செயலாளர் பதிவியை தனக்கு வழங்கினால், மருமகனை நிற்க வைத்து ஜெயித்துக்காட்டுவதாக விஸ்வநாதன் கூறியிருக்கிறார்! இதற்கு சீனிவாசன் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லையாம், எனவே பழனியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் சீனிவாசன் என்பவதை திண்டுக்கல் தொகுதியில் நிறுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் அதிமுகவின் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த திண்டுக்கல் தொகுதி முதன்முதலாக கூட்டணி கட்சியின் கைகளுக்கு போயிருக்கிறது.