உடைந்த குடிநீர்குழாய்! கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்… கவனம் ஈர்க்க சமூக ஆர்வலர் செய்த செயல்

உடைந்த குடிநீர்குழாய்! கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகள்… கவனம் ஈர்க்க சமூக ஆர்வலர் செய்த செயல்

அனைத்து நகராட்சிகளும் வளர்ந்து ஸ்மார்ட்சிட்டிகளாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு மட்டும் மாறவேயில்லை. ஒரு சிறிய பழுது அல்லது பிரச்சினை என்றாலும் அதனை சரிசெய்ய பொதுமக்கள் படாத பாடு படவேண்டியிருக்கிறது. மனுக்கள் கொடுத்து கால்தான் தேய்ந்து போகிறது. 

இந்நிலையிலும், ஒருசில சமூக செயற்பாட்டளர்கள் வித்தியாசமாக எதாவது செய்து அதிகாரிகளின் கவனம் ஈர்த்து அந்த பிரச்சினையை சரிசெய்ய முயல்கின்றனர். இதேபோல், பெங்களூருவில் அதிக நாட்களாக சரிசெய்யப்படாமல் இருந்த சாலையை புணரமைக்க, அதே சாலையில் விண்வெளி உடைகளை அணிந்து நிலவில் இருப்பது போல் புகைப்படங்களை ஒரு குழு வெளியிட்டது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இறுதியில் அந்த சாலை சரிசெய்யப்பட்டது.

bangalore moon road photoshoot

இப்போது, திருப்பூரில் உள்ள ஒரு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சில நாட்களாக தண்ணீர் வீணாக கழிவுநீரில் கலந்து வருகிறது. நகராட்சியில் இதுகுறித்து பல புகார்கள் அளித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒரு சமூக ஆர்வலர் ஒருவர், தண்ணீர் கசியும் அந்த பள்ளத்தில் இறங்கி சோப்பு போட்டு குளிப்பது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு பிரச்சனையையும் சரிசெய்ய இந்த மாதிரி புதுசா ஏதாவது செஞ்சா தான் அரசு அதிகாரிகள் அவங்க கடமையை செய்வாங்க போல!