உடைத்து ஊற்றிய முட்டைக் குழம்பு… இது வேற லெவல்!

உடைத்து ஊற்றிய முட்டைக் குழம்பு… இது வேற லெவல்!

பொதுவாக நம்ம ஊர்களில் முட்டை குழம்பு என்றால்,மசாலா அரைத்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த முட்டையை முழுசா போட்டு கொதிக்க வைத்து இறங்குவார்கள்.அந்த முட்டையில் மசாலா இறங்காமல் முட்டை டேஸ்ட் அப்படியே இருக்கும்.உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு வேற லெவல்.எப்படி செய்வது.

தேவையான பொருட்கள்.

நாட்டுக்கோழி முட்டை 6
பெரிய வெங்காயம் 2
தக்காளி 3
பச்சை மிளகாய் 2
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
மல்லித்தூள் 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
உப்பு
கறிவேப்பிலை
கடுகு

அரைக்க

தேங்காய் அரை மூடி
பொட்டுக்கடலை 2 ஸ்பூன்

Egg curry

எப்படிச் செய்வது.

முதலில் , தேங்காயைத் துருவி,பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாய் அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி,அது சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள்.
பிறகு,பச்சை மிளகாயை கீறிப் போடுங்கள். அத்துடன் பொடியாக வெட்டிய வெங்காயத்தை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்கள். அதன்பின் பொடியாக வெட்டிய தக்காளியும் சிறிது உப்பும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்துக்கொண்டு தக்காளி உருத்தெரியாமல் போகுவரை வதக்கி,மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள்.

இப்போது அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை கரைசலை ஊற்றி சிறிது நீர் சேர்த்து உப்பை சரிபாருங்கள். குழம்பு கொதித்ததும் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து,அவை மோதிக்கொள்ளாமல் இடை வெளி விட்டு குழம்பில் ஊற்றுங்கள்.ஐந்து நிமிடத்தில் முட்டைகள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அனைத்துவிட்டால் முட்டைகுழம்பு தயார்