உடல் முழுக்க கவசம் – மேற்கு வங்க அமைச்சர் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு

 

உடல் முழுக்க கவசம் – மேற்கு வங்க அமைச்சர் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு

கொல்கத்தா: மேற்கு வங்க அமைச்சர் உடல் முழுவதும் கவசம் அணிந்து மக்களை வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டார்.

கேற்குவங்க மாநிலம் புர்ப பர்தமான் மாவட்டத்தில் உள்ள லார்ட் கர்சன் கேட் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கின்போது மக்கள் வீட்டிலேயே தங்குமாறு மேற்கு வங்க அமைச்சர் ஸ்வபன் டெப்நாத் குடிமக்களை கேட்டுக் கொண்டார்.

மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய அப்பகுதியில் வீதி, வீதியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்த அவர் முகம் உட்பட உடல் முழுவதும் கவச உடையை அணிந்திருந்தார். இந்த வீடியோ அம்மாநிலத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.