உடல் சிதைந்த நிலையில் சுர்ஜித்தின் உடல் மீட்பு! மீளா துயரில் தமிழகம்!! 

 

உடல் சிதைந்த நிலையில் சுர்ஜித்தின் உடல் மீட்பு! மீளா துயரில் தமிழகம்!! 

கடந்த 25 ஆம் தேதி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையிலிருந்து மீட்கப்பட்டது. 

கடந்த 25 ஆம் தேதி மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையிலிருந்து மீட்கப்பட்டது. 

5 ஆண்டுகளுக்கு முன்பு 600 அடிக்கு தோண்டப்பட்டுக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் பற்றி  தான் ஒட்டுமொத்த தமிழகமே கவலை கொண்டுள்ளது.  கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்த நிலையில் 5 நாட்களாக மீட்புப்பணிகள் நடைபெற்று வந்தது. தமிழக அமைச்சர்களும் விடிய விடிய மீட்பு பணிகளைப் பார்வையிட்டு வந்தனர். சுஜித் உயிருடன் மீண்டுவர வேண்டும் என தமிழகம் முழுவதுமுள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் மதபேதமின்றி பிரார்த்தனை நடைபெற்றன

surjith

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த  வருவாய் துணை ஆணையர் ராதா கிருஷ்ணன் குழந்தை சுர்ஜித்தின் உடலிலிருந்து துர்நாற்றம் விசுவதாக அறிவித்தார். இதையடுத்து குழந்தையின் உடலை மீட்கும் போராட்டம் தொடர்ந்தது. போர்வெல் மூலம் அருகில் குழித்தோண்டுவதை நிறுத்திய மீட்புக்குழு ஆழ்த்துளை கிணற்றின் வழியாகவே சுஜித்தின் உடலை மீட்கப் போராடின. அதன்படி அதிகாலை 4.30 மணிக்கு சுர்ஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. 80 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மீட்பு முயற்சி தோல்வியில் முடிந்ததால் மீட்புக்குழுவினர், அமைச்சர்கள் என அங்கிருந்தவர்கள் சோகத்தில் மூழ்கினர். இதையடுத்து குழந்தை சுர்ஜித்தின் பெற்றோரிடம் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

surjith

88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு மணப்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.