உடல் எடையை சீராக பராமரிக்க ஈஸி டிப்ஸ்!

 

உடல் எடையை சீராக பராமரிக்க ஈஸி டிப்ஸ்!

உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினமான காரியமோ, அதைவிட கடினமான காரியம் குறைந்த எடையை சரியாக பராமரிப்பது. இதனால், உடல் எடையைக் குறைத்தவர்கள் மீண்டும் மீண்டும் உடல் பருமன் பிரச்னையை சந்திக்கின்றனர். உடல் எடையைக் குறைத்தவர்களுக்கு மட்டுமல்ல, சரியான பாடி மாஸ் இன்டெக்ஸ் உள்ளவர்களும் தங்கள் உடல் எடையை பராமரிக்க செய்ய வேண்டிய ஐந்து காரியங்கள் பற்றிப் பார்ப்போம்.

உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினமான காரியமோ, அதைவிட கடினமான காரியம் குறைந்த எடையை சரியாக பராமரிப்பது. இதனால், உடல் எடையைக் குறைத்தவர்கள் மீண்டும் மீண்டும் உடல் பருமன் பிரச்னையை சந்திக்கின்றனர். உடல் எடையைக் குறைத்தவர்களுக்கு மட்டுமல்ல, சரியான பாடி மாஸ் இன்டெக்ஸ் உள்ளவர்களும் தங்கள் உடல் எடையை பராமரிக்க செய்ய வேண்டிய ஐந்து காரியங்கள் பற்றிப் பார்ப்போம்.
உடல் எடையைக் குறைப்பது அல்லது உடல் எடையைப் பராமரிப்பது என்பது ஒரு நாளில் முடியும் காரியம் இல்லை. இது தினசரி நாம் செய்ய வேண்டியது என்பதை முதலில் மனதில் பதிய வைக்க வேண்டும். தினமும் நடக்கக் கூடிய மெதுவான, நிலையான பயிற்சியா இது இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் திட்டமிடுதல் அவசியம். எல்லோருக்கும் ஒரேமாதிரியான பயிற்சிகள் சரியாக இருக்காது. அவரவர் உடல் எடை, தேவைக்கு ஏற்ப பயிற்சிகள் மாறும்.

fat-to-fit

உடற்பயிற்சி செய்தால் அதிக கலோரி எரிக்கப்படும். இது நமக்கு பசி உணர்வைத் தூண்டும். கார்போஹைட்ரேட் டிரிங்க்ஸ், சாஃப்ட் டிரிங்க்ஸ், எனெர்ஜி டிரிங்க்ஸ்க்கு மாற்றாக அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறுகளை பலர் அருந்துகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை மிகக் குறைவாக சேர்க்கப்பட்ட, நாட்டு சர்க்கரை சேர்க்கப்பட்ட எலுமிச்சை சாறு, ஐஸ் டீ, கலோரி குறைவாக உள்ள பழச் சாறுகளை எடுத்துக்கொள்ளலாம். கார்பனேட்டட் பானங்களைத் தவிர்த்தாலே கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்புகள், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

fruit-juice

சாப்பாட்டை மூன்று வேளை எடுப்பதற்கு பதில், அதை பிரித்து ஆறு வேளையாக எடுத்துக்கொள்ளலாம். காலையில் 9 மணிக்கு முன்னதாக சாப்பிட்டுவிட வேண்டும். அடுத்த உணவை 1 மணிக்கு எடுப்பதற்கு பதில் 10.30 முதல் 11 மணிக்குள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஆறு வேளையும் ஃபுல் மீல்ஸ் கூடாது. மூன்று வேளையாக எடுத்துக்கொள்ளும் உணவைத்தான் ஆறு வேளையாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஒவ்வொரு வேளையும் வயிறு நிரம்பச் சாப்பிடுதல் கூடாது. இது உடலில் கலோரி பயன்பாட்டை சீராக வைத்திருக்க உதவும். தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு உணவை முடித்துவிட வேண்டும். 7 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுத் தூங்கச் செல்வதன் மூலம் அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

diet-food

இவற்றுக்கு நடுவே உங்கள் உடற்பயிற்சிகளை மறக்க வேண்டாம். உடல் எடையைக் குறைக்க ஒரு மாதிரியான பயிற்சிகள் உள்ளன. உடல் எடையை பராமரிக்க அந்த பயிற்சிகள் சரியாக இருக்காது. எனவே, உங்கள் உடற்பயிற்சி ஆலோசகரை அணுகி உடல் தசைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை எப்படி செய்வது என்று கேட்டு தெரிந்துகொண்டு செய்யுங்கள். 
இந்த எளிய பயிற்சி, ஆலோசனைகளை தினமும் பின்பற்றி வந்தால் உடல் எடையை கட்டுக்கோப்பாக தொடர்ந்து வைத்திருக்க முடியும்… அதனுடன் எந்த நோயும் நம்மை நெருங்காது!