உடல் இளைப்பதற்கான எளிய வழிகள்

 

உடல் இளைப்பதற்கான எளிய வழிகள்

நாட்டில் எல்லோருக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, பலருக்கும் உடல் பருமன் தான் ஆகப் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. காலையில் குளித்து முடித்து கண்ணாடி முன் நிற்பதில் ஆரம்பித்து, யாரைப் பார்த்தாலும் தொப்பையை உள்ளிழுத்து பேசுவதில் தொடர்ந்து, ஒரு கப் காபி குடிக்கலாம்னு யோசிச்சாலும், காபி இருக்கும் சர்க்கரை பயமுறுத்துகிறது. 

நாட்டில் எல்லோருக்கும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, பலருக்கும் உடல் பருமன் தான் ஆகப் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. காலையில் குளித்து முடித்து கண்ணாடி முன் நிற்பதில் ஆரம்பித்து, யாரைப் பார்த்தாலும் தொப்பையை உள்ளிழுத்து பேசுவதில் தொடர்ந்து, ஒரு கப் காபி குடிக்கலாம்னு யோசிச்சாலும், காபி இருக்கும் சர்க்கரை பயமுறுத்துகிறது. 
பிடிச்ச மாதிரி ஐஸ்கிரீம், பிஸ்கட், சாக்லேட், வறுத்த உணவுகள், இனிப்பு வகைகள்னு எதையுமே தொடமுடியலை’ என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் தான் அநேகம் பேர்.

 weight

உடல் எடையைக் குறைப்பது எல்லாம் பெரிய சிரமமான விஷயம் எல்லாம் கிடையாது. கொஞ்சம் தன்னம்பிக்கையும், நிறைய விடாமுயற்சியும் தான் தேவையாவை.
உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக, ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது, வீட்டு சாப்பாட்டைத் தவிர்த்து வெளியிடங்களில் கண்ட இடங்களில் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் தவிர்ப்பது, தொலைக்காட்சி பார்க்கும் போது நொறுக்குத் தீனியைப் போட்டு நொறுக்குவது, இரவில் நீண்ட நேரம் கண்விழித்து, தூக்கத்தைத் தவிர்ப்பது போன்றவைகளைச் சொல்லலாம்.
சில அடிப்படையான விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், உடல் பருமனை எளிதில் குறைக்கலாம். 
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்து வந்தால் தேவையற்றக் கொழுப்புகள் நீங்கி, உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து, சாப்பிட்டு வந்தால், உடல் மெலியும். 
அமுக்கிராவேர், பெருஞ்சீரகம், போன்றவற்றை பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். 

weight

வாரத்திற்கு இரண்டு முறையாவது சுரைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுச் சதை குறையும்.
தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். 
வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
தினமும் மூன்று வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் சாப்பிடும் அளவு குறையும். 
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது, உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.