“உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்” : மத்திய அரசு சுற்றறிக்கை!

 

“உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்”  : மத்திய அரசு சுற்றறிக்கை!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

ttn

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும். உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு முழுக்கை சட்டை அணிந்து வருவது நல்லது.

ttn

அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். ஒரே இடத்தில் அதிகமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி கொரோனா விழிப்புணர்வு குறித்து அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினரிடம் இளைய தலைமுறை கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.