உடல்நலக் குறைபாடு..நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

 

உடல்நலக் குறைபாடு..நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

அவரை கைது  செய்ய வேண்டும் என்று பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த 2 ஆம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்தும் அமித்ஷாவின் சோலியை முடிக்க வேண்டும் என்றும் கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் மீது பா.ஜ.கவினர் புகார் அளித்தனர். அதுமட்டுமில்லாமல் அவரை கைது  செய்ய வேண்டும் என்று பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த 2 ஆம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

ttn

அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி ஜாமீன் கேட்டு  நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 7 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.நெல்லை கண்ணனின் மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேலைகளிலும் கையெழுத்துப் போட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் அவருக்கு நேற்று நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நெல்லையில் உள்ள ஷீபா என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.