உடலை புஷ்டியாக்கும் உருளைக்கிழங்கு வடை

 

உடலை புஷ்டியாக்கும் உருளைக்கிழங்கு வடை

நோஞ்சான் மாதிரி இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி உருளைக்கிழங்கு வடை. பொதுவாகவே உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடல் புஷ்டியாகும். உருளைக்கிழங்கில் அதிகமாக மாவு சத்துக்கள் உண்டு.

நோஞ்சான் மாதிரி இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி உருளைக்கிழங்கு வடை. பொதுவாகவே உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடல் புஷ்டியாகும். உருளைக்கிழங்கில் அதிகமாக மாவு சத்துக்கள் உண்டு.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1/4கிலோ
கடலைமாவு – 10கிராம்
அரிசி மாவு – 25கிராம்
பச்சைமிளகாய் – 5
இஞ்சி – 1துண்டு
கடுகு – 1தேக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

po

செய்முறை
உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு, உருளைகிழங்கை நன்றாக வடைக்கு மாவு அரைப்பது போல  மசித்துக் கொள்ளவும். இப்பொழுது உருளைக்கிழங்கு மசியலுடன் உப்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள். கடலைமாவையும், அரிசி மாவையும் உருளைக்கிழங்குடன் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். 
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்துக் கொள்ளவும். வாணலியில், பச்சைமிளகாய் , இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, உருளைக்கிழங்கு கலவையுடன் போடவும். 
இதனுடன் கொத்தமல்லி இலையைப் போட்டு நன்றாக பிசைந்துக் கொண்டு மாவு உருண்டைகளை, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மொறுமொறு, சத்தான வடை தயார்.