உடலுறவு வைத்து கொண்டாலும் டெங்கு பரவும்: ஆய்வில் வெளிவந்த உண்மை!

 

உடலுறவு வைத்து கொண்டாலும்  டெங்கு பரவும்: ஆய்வில் வெளிவந்த உண்மை!

நீரில் உருவாகும் இந்த கொசுக்கள் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துவதோடு, பல சமயங்களில் உயிரையும் பறித்து விடுகிறது

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட  ஒருவருடன் உடலுறவு வைத்து கொண்டாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம்  பரவும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தேங்கிக் கிடக்கும்  நீரில் உருவாகும் இந்த கொசுக்கள் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்துவதோடு, பல சமயங்களில் உயிரையும் பறித்து விடுகிறது. டெங்கு காய்ச்சல் கொசுக்களால்  தான் பரவு என்று நினைத்திருந்த நமக்கு ஸ்பெயினில் நடந்த ஆய்வு ஒன்று கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

dengue

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.ஆனால்  அவர் வசித்து வந்த பகுதியில்  டெங்கு பாதிப்பு ஏதும் இல்லை. இதனால் பயணத்தின் போது  பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில்,  மருத்துவக்குழு அதனை நிராகரித்தது. 

dengue

தொடர்ந்து நடந்த விசாரணையில், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண்  நபருடன், இந்த நபர் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளார்.சமீபத்தில் இவரது ஆண்  துணை கியூபா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.அங்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தான் இவரது துணைக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. பாலியல் உறவு மூலமாகவும் டெங்கு பரவும் என்பதை அந்நாட்டு  பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.