உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் புதினா – ஜூஸ்!

 

உடலுக்கு குளிர்ச்சி தரும் லெமன் புதினா – ஜூஸ்!

கோடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சினைகளையும், உடல் சூட்டை குறைக்கும் லெமன் -புதினா ஜூஸ்

 

என்னென்ன தேவை?

 

*புதினா இலைகள் – 5, 

 

*எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன், 

 

*உப்பு – சிட்டிகை, 

 

*தேன் – 5 டீஸ்பூன், 

 

*இஞ்சி – சிறிய துண்டு,

 

எப்படிச் செய்வது?

 

*புதினா இலைகளை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். 

 

*இஞ்சியை தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.

 

*மிக்சியில் புதினா இலைகளுடன் இஞ்சி, உப்பு, தேன், தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். 

 

*அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகவும். 

 

*குளுகுளு புதினா லெமன் – ஜூஸ் ரெடி. சாப்பாட்டில் இவற்றை ஒதுக்கும் குழந்தைகள்கூட, இப்படிச் சாறாகக் கொடுத்தால், ரசித்து ருசிப்பார்கள்.