உடற்பயிற்சி செய்யும்போது முக கவசம் அணிய வேண்டாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

 

உடற்பயிற்சி செய்யும்போது முக கவசம் அணிய வேண்டாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

உடற்பயிற்சி செய்யும்போது முக கவசம் அணிய தேவையில்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வுஹான்: உடற்பயிற்சி செய்யும்போது முக கவசம் அணிய தேவையில்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று நோய் பரவலால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிவது என்பது கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே பொதுவான ஒரு விஷயமாகி விட்டது. ஆனால் முக கவசம் அணிவதால் அசவுகரியம் ஏற்படுவதுடன் அது சுவாசிப்பதையும் கடினமாக்குகிறது என்பதே உண்மை.

ttn

கடந்த மே 7 ஆம் தேதி சீனாவின் வுஹான் நகரில் 26 வயது இளைஞர் முக கவசம் அணிந்து கிட்டத்தட்ட 4 கி.மீ தூரம் ஜாக்கிங் சென்று வந்த பிறகு அவருக்கு மார்பு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முக கவசம் அணிந்து அவர் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதால் அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

முக கவசம் அணிந்து அவர் நீண்ட தூரம் ஓடியதால் நுரையீரலுக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் கிடைத்ததால் அவருக்கு மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முக கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல இதுபோன்ற சிக்கலான அணுகுமுறைகளை கையாண்டு தங்களுடைய உயிருக்கு தாங்களே ஆபத்து விளைவிக்காமல் இருப்பதும் முக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.