உடம்பை கழிவுகளில் இருந்து பாதுகாக்கும் அரிய வைத்தியம்

 

உடம்பை கழிவுகளில் இருந்து பாதுகாக்கும் அரிய வைத்தியம்

‘பழையன கழிதல்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வளர்த்தார்கள். வீட்டிலும், மனதிலும் மட்டுமல்ல… நம்  உடம்பிலும் இருக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும். தினந்தோறும், சோப்பு போட்டு குளிக்கிறோம். வாசனையான க்ரீம்களைப் பூசிக் கொள்கிறோம். வாரம் ஒரு நாள் ஸ்கரப்பர் வைத்து கால்களைப் பாதுகாக்கிறோம். ஆனால், உடலுக்குள்ளே இருக்கும் கழிவுகளை அகற்றுகிறோமா?

‘பழையன கழிதல்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வளர்த்தார்கள். வீட்டிலும், மனதிலும் மட்டுமல்ல… நம்  உடம்பிலும் இருக்கும் கழிவுகளை அகற்ற வேண்டும். தினந்தோறும், சோம்பு போட்டு குளிக்கிறோம். வாசனையான க்ரீம்களைப் பூசிக் கொள்கிறோம். வாரம் ஒரு நாள் ஸ்கரப்பர் வைத்து கால்களைப் பாதுகாக்கிறோம். ஆனால், உடலுக்குள்ளே இருக்கும் கழிவுகளை அகற்றுகிறோமா?

motion

தினமும் இரு வேளை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதே போல் தினமும் இருமுறை மலம் கழிக்க வேண்டும். அப்படியும் நம் உடலுக்குள் கழிவுகள் தேங்கி நிற்கும். திடக்கழிவு, திரவக்கழிவு, வாயுக்கழிவு, சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு என நம் உடலுக்குள் கழிவுகள் தேங்கிக் கொண்டே தா இருக்கும். வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியை கவனித்திருப்பீர்கள். சுத்தமான தண்ணீர் தான். அந்த நீரைத் தான் குடிக்கப் பயன்படுத்துகிறோம். அப்படியும் எப்படி அந்த தண்ணீர் தொட்டி ஒரே வாரத்தில் இத்தனை அழுக்காக மாறிவிடுகிறது? தண்ணீர் தொட்டியே இவ்வளவு அசுத்தமாகும் பொழுது, நாம் சாப்பிடும் நச்சு கலந்த உணவுப் பொருட்கள், சுவாசிக்கும் மாசு கலந்த காற்று எல்லாம் உடலுக்குள் சென்று கழிவுகளாகத் தானே தங்கியிருக்கும்?
இந்த கழிவுகளை எல்லாம் சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான முறையைப் பார்க்கலாம்.
வாரத்தில் ஒரு நாளாவது இந்த முறையைப் பயன்படுத்தி,  நம் உடம்பிற்குள் இருக்கும் கழிவுகளையும் அகற்ற வேண்டும். உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை தேனிலும், எலுமிச்சை சாற்றிலும் இருக்கிறது. 

stomach

செய்முறை
ஒரு டம்ளர் நீரை குறைந்த அடுப்பில் ஏற்றி சூடு படுத்தவும். குறைந்த தனலில் வைத்து, கொதிக்க விடாமல், நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும். இப்போது, ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சாறு  பிழிந்துக்கொள்ளவும். 3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக கலந்து, சுவையை அனுபவித்து குடிக்கவும். காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும். எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும்.  

honey and lemon

இதை வயது வித்தியாசமில்லாமல் எல்லோருமே அருந்தலாம். உணவாகவும்,மருந்தாகவும், செயல்படும் இயற்கை பானம்.  சர்க்கரை நோயாளிகளும் கூட பயமில்லாமல் அருந்தலாம். சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும். மேலும், தேன் நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு. சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய மூட நம்பிக்கை.